வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 9 மே 2019 (12:41 IST)

விட்ட இடத்தை பிடிக்க, லட்சங்களை பரிசாக கொட்டும் டிக் டாக்!!

தடையின் காரணமாக விட்ட இடத்தை பிடிக்க சில லட்சங்களை ஆஃப்ராக வங்குகிறது டிக் டாக். 
 
கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், முத்துக்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில் டிக் டாக் மற்றும் மியூசிக்கலி போன்ற செயலிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். 
 
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிக் டாக் தடை செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக செய்யப்பட்ட மேல் முறையீட்டிலும் தடையை நீக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.
 
அதோடு, ஆப்பிள், கூகுள் ஆகிய நிறுவனங்கள் டிக் டாக் செயலியை நீக்கும்படி எச்சரித்திருந்தனர். இதனை ஏற்று கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலியை நீக்கப்பட்டது. 
இதனால், டிக் டாக் நிறுவனம் பெரும் சரிவை சந்தித்து. ஒரு நாளைக்கு 3.48 கோடி ரூபாய் நஷ்டமடைவதாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனையடுத்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 
 
அப்போது டிக் டாக்கில் இருந்து 60 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கப்பட்டு விட்டதாகவும், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் டிக் டாக் ஆப்பை பயன்படுத்த முடியாது என்றும் டிக் டாக் நிறுவனம் வாக்குறுதி அளித்தது. இதனால் டி டாக் மீதான தடை நீக்கப்பட்டது. 
 
வழக்கின் இடைப்பட்ட நேரத்தில் சரிவை சந்தித்த டிக் டாக் மீண்டும் மார்கெட்டை பிடிக்க சில லட்சங்களை ஆஃபராக வழங்கியுள்ளது. ஆம், மே 1 முதல் 16 ஆம் தேதி வரையில் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்பவர்களில் 3 பேருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.