வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 20 ஜூன் 2020 (07:51 IST)

செய்தியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த டிக்டாக் சூர்யா! அடுத்த நடந்த அதிரடி!

டிக்டாக்கில் பிரபலமாக டிக்டாக் ரௌடி பேபி சூர்யா என அறியப்படும் சுப்புலட்சுமி மேல் போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருப்பூரைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் டிக்டாக் வீடியோக்களின் மூலம் இணையத்தில் பரவலாக அறியப்பட்டவர். தனது டிக்டாக் ஐடியான ரௌடி பேபி சூர்யா வில் இருந்து இவர் வெளியிடும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் ஹிட்டடித்தன. இந்நிலையில் இவர் சிங்கப்பூர் சென்றிருந்த போது கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அங்கேயே மாட்டிக்கொண்டார்.

அதன் பின் சிறப்பு விமானம் மூலமாக திருப்பூர் வந்த அவரை கொரோனா சோதனை மேற்கொள்ள மாநகராட்சி அழைக்க வந்துள்ளது. ஆனால் அதற்கு மறுத்த அவர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர். பின்னர் அவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தி, அவர் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

இது சம்மந்தமாக தனியார் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது. இதனால் கடுப்பான சூர்யா அந்த தொலைக்காட்சி நிரூபரை மிரட்டும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு சம்மந்தப்பட்ட நபர் போலிஸில் புகார் அளிக்க, இப்போது சூர்யா மீது இந்திய தண்டனைச் சட்டம் 294(b), 500 and 506(2) என்ற ஆபாசமாக பேசுதல், அவதூறு பரப்புதல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.