புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinothkumar
Last Updated : புதன், 5 ஆகஸ்ட் 2020 (15:11 IST)

கேக் போல இருங்கள் – துப்பாக்கி நடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள்!

துப்பாக்கி படத்தில் அக்‌ஷ்ரா கவுடா தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

துப்பாக்கி மற்றும் ஆரம்பம் ஆகிய படங்களில் மிகச்சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர் அக்‌ஷரா கவுடா. மேலும் இவர் உயர்திரு 420 என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார். தற்போது  இவர் தெலுங்கு மற்றும் கன்னடம் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் துப்பாக்கி படத்தில் நடித்தது தனக்கு இப்போது வருத்தத்தை அளிப்பதாக சொல்லியுள்ளார்.

துப்பாக்கி படத்தில் ஆபாசப் படங்களில் நடித்த ஒரு பெண்ணாக நடித்திருந்தார் அக்‌ஷரா கவுடா. ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பின் போது காஜலுக்கு தோழியாக நடிக்கதான் தன்னை அழைத்ததாகவும், அந்த படத்தில் நடித்தது குறித்து தான் இப்போது வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த படத்தில் நடித்ததன் மூலம் விஜய் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது மட்டுமே ஒரே நல்லது எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் வரிசையாக சமூகவலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளை ஈர்க்க நினைக்கிறார். நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை முன்னர் வெளியிட்ட அக்‌ஷரா இப்போது , நீச்சல் உடையில் கையில் கேக்குடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அழகான கேக் போல இருங்கள் எனக் கூறியுள்ளார்.