1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 28 டிசம்பர் 2022 (15:14 IST)

நெட்பிளிக்ஸில் சாதனை படைத்த துணிவு…!

துணிவு திரைப்படம்தான் இதுவரை நெட்பிளிக்ஸ் அதிக தொகை கொடுத்து வாங்கிய தென்னிந்திய திரைப்படம் என சொல்லப்படுகிறது.

அஜித் நடித்த துணிவு திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் ஏற்கனவே சில்லா சில்லா , காசேதான் கடவுளடா மற்றும் கேங்ஸ்டா ஆகிய பாடல்கள் ரிலீஸ் ஆகி வரவேற்பைப் பெற்றுள்ளன.

வரும் டிசம்பர் 31 ஆம் தேதி டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் நெட்பிளிக்ஸில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. நெட்பிளிக்ஸ் நிறுவனம் மிக அதிக விலை கொடுத்து வாங்கிய தென்னிந்திய படமாக துணிவு திரைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தை சுமார் 70 கோடி ரூபாய் கொடுத்து நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.