1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 28 டிசம்பர் 2022 (09:24 IST)

கமல்ஹாசன் படத்தைத் தாமதப்படுத்தும் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் இப்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

வாரிசு படத்தை அடுத்து தமிழில் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் தில் ராஜு. இந்த படம் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் ஹரி ஷங்கர் என்பவர் இயக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கனவே சிவகார்த்திகேயன், கமல்ஹாசன் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படம் டிசம்பர் மாதமே தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் தாமதம் ஆகி ஜனவரி அல்லது பிப்ரவரியில் தொடங்கும் என சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது மார்ச் மாதம்தான் தொடங்கும் என சொல்லப்படுகிறது. பிப்ரவரியில் அவர் தில் ராஜு படத்தில் நடிப்பதால், இந்த படம் மேலும் தாமதம் ஆகிறது என சொல்லப்படுகிறது.