திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 23 ஜனவரி 2023 (11:19 IST)

துணிவு படத்தின் சக்சஸ் பார்ட்டிக்கு தடை போட்ட அஜித்… இதுதான் காரணமா?

அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

சமீபத்தில் வெளியான அஜித்- வினோத் கூட்டணியின் துணிவு திரைப்படம் நல்ல விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க வந்த பரத்குமார் என்ற ரசிகர் கொண்டாட்ட பரவசத்தில் லாரி ஒன்றின் மீது ஏறி நடனமாடி கீழே விழுந்து மரணமடைந்தார்.

இந்த சம்பவத்தால் அஜித் மிகவும் மனவருத்தத்தில் உள்ளதாக துணிவு படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த காரணத்தால்தான் துணிவு படத்தின் சக்ஸஸ் பார்ட்டியை தவிர்க்க சொல்லிவிட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.