திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 26 நவம்பர் 2022 (09:31 IST)

துணிவு படத்தை அமெரிக்காவில் வெளியிடும் பிரபல நிறுவனம்!

அஜித் நடித்த துணிவு திரைப்படம் மற்றும் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் ஆகிய இரண்டும் பொங்கல் திருநாளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் துணிவு திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என அஜித் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது துணிவு படத்தை வாங்கியுள்ள ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், தியேட்டர்களை ஒப்பந்தம் செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளது. புறநகர் பகுதிகளில் கூட பல திரையரங்குகள் பொங்கலுக்கு தங்கள் தியேட்டரில் துணிவு ரிலீஸ் ஆவதை உறுதி செய்துள்ளனர். ஆனால் வாரிசு படத்துக்கான திரையரங்கு ஒப்பந்த வேலைகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில்தான் ஒட்டுமொத்த வெளிநாட்டு ரிலீஸ் உரிமையையும் லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இப்போது வெளிநாடுகளில் அதிகளவில் திரையரங்குகள் முன்பதிவு செய்யும் வேலையை லைகா நிறுவனம் சைலண்ட் ஆக தொடங்கியுள்ளதாம். இதனால் வெளிநாடுகளில் துணிவு திரைப்படம் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் லைகாவிடம் இருந்து அமெரிக்காவில் ரிலீஸ் செய்யும் உரிமையை பிரபல நிறுவனமான சரிகம பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக இப்போது சரிகம பிலிம்ஸ் அறிவித்துள்ளது.