1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 25 நவம்பர் 2022 (17:10 IST)

ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்யும் அடுத்த படம்: தேதி அறிவிப்பு

red giant
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பல திரைப்படங்களை ரிலீஸ் செய்து வருகிறது என்பதும் குறிப்பாக 2022ஆம் ஆண்டு வெளியான முக்கிய திரைப்படங்கள் அனைத்தையுமே இந்நிறுவனம் தான் ரிலீஸ் செய்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பிரபுசாலமன் இயக்கத்தில் அஸ்வின் நடிப்பில் உருவான செம்பி என்ற திரைப்படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த படம் டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிவாஸ் பிரசன்னா இசையில் உருவாகி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த நிலையில் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
குக் வித் கோமாளி அஸ்வினுக்கு இந்த படமாவது திருப்புமுனையை ஏற்படுத்துமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran