தக் லைஃப் படத்தின் ஷூட்டிங்கில் இழுபறி… இதுதான் காரணமா?
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்' படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. இதில் கமல்ஹாசன், சிம்பு மற்றும் அபிராமி உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் கமல்ஹாசனோடு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், சிம்பு, அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது.
படத்தின் ஷூட்டிங் டெல்லியில் நடந்தது. அங்கு சில நாட்கள் நடந்த ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பியது படக்குழு. இதையடுத்து படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் சென்னையில் 15 நாட்களுக்கு மேல் நடந்தது. அங்கு சிம்பு மற்றும் கமல் பங்கேற்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன.
இதையடுத்து அடுத்த கட்ட ஷூட் ஜூலை 23 ஆம் தேதி மீண்டும் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. வழக்கமாக மணிரத்னம் தனது படங்களின் ஷூட்டிங்கை திட்டமிட்டு குறுகிய நாட்களில் முடித்துவிடுவார். ஆனால் தக் லைஃப் ஷூட்டிங் 100 நாட்களை தாண்டி செல்கிறதாம். அதற்குக் காரணம் இந்த படத்தின் திரைக்கதையில் இடையில் செய்யப்பட்ட பல மாற்றங்கள்தான் காரணமாம்.