1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 1 ஜூலை 2024 (11:46 IST)

அபூர்வ சகோதரர்கள் குள்ளமாக நடித்தது எப்படி?... ரகசியத்தை வெளியிடப் போகும் கமல்ஹாசன்!

தமிழ் சினிமாவில் பல பரிசோதனை முயற்சிகளை செய்து பல படங்களை தயாரித்து நடித்தவர் கமல்ஹாசன். அப்படி அவர் செய்த பல பரிசோதனைகள் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆனால் காலம் கடந்து அந்த படங்கள் பேசப்பட்டன.

இப்படி அவர் செய்த பரிசோதனை முயற்சிகளில் ஒன்றுதான் ‘அபூர்வ சகோதரர்கள்’. அந்த படத்தில் அவர் குள்ளமான தோற்றம் கொண்ட ஒருவராக நடித்திருந்தார். தொழில்நுட்ப வசதிகள் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் போன்ற பல வசதிகள் உள்ள இந்த காலத்தில் அது மிக எளிதான ஒன்று. ஆனால் அவை எதுவும் இல்லாமல் கமல் அந்த படத்தில் மிகவும் தத்ரூபமாக நடித்திருப்பார். அதில் எந்த குறையும் இல்லாத அளவுக்கு அதை சாதித்திருப்பார்.

அந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய வெற்றிக்கு அந்த கதாபாத்திரம்தான் மிக முக்கியமானக் காரணமாக அமைந்தது. படம் வெளியாகி கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் ஆகியும் அதில் எப்படி கமல் நடித்தார் என்பதன் ரகசியத்தை வெளியிடவில்லை. அதை பொத்திப் பொத்தி பாதுகாத்தார். ஆனால் இப்போது ஒரு பத்திரிக்கையாளர் அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டாமா எனக் கேட்டதற்கு கமல் ஒரு பதிலளித்துள்ளார்.

அதில் “நீங்கள் சொல்வது சரியானதுதான். நான் இன்னும் ஒன்றரை மாதத்தில் அந்த படத்தில் என்னன்ன செய்து குள்ளமாக நடித்தேன் என்பதன் ரகசியத்தை வெளியிடுகிறேன்” எனக் கூறியுள்ளார். அநேகமாக படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சினிமா பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.