வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : செவ்வாய், 2 ஜூலை 2024 (06:32 IST)

அட்லியின் அடுத்த படத்தில் ரஜினிக்கு பதில் கமல்ஹாசனா? மாறி மாறி பரவும் வதந்தி..!

அடலியின் அடுத்த படத்தில் சல்மான்கான் மற்றும் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாகவும் இரு நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. 
 
ஆனால் தற்போது வந்துள்ள தகவல் படி இந்த படத்தில் ரஜினிக்கு பதில் தற்போது கமல்ஹாசன் நடித்த இருப்பதாகவும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
ஆனால் கோலிவுட் திரை உலகில் சில விபரம் அறிந்தவர்கள் இந்த தகவல் குறித்து கூறிய போது அட்லி இன்னும் அடுத்த படம் குறித்து முடிவெடுக்கவில்லை என்றும் சல்மான் கான் நடிப்பது கூட இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அட்லியின் அடுத்த படம் குறித்து வெளிவந்து கொண்டு இருக்கும் தகவல் அனைத்துமே வதந்திகள் தான் என்றும் கூறி வருகின்றனர்.
 
உண்மையில் அட்லி அடுத்த படத்தை தொடங்க இருக்கிறாரா? அப்படியே தொடங்கினாலும் அதில் யார் நடிக்க இருக்கிறார்கள் என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில் நெட்டிசன்களால் தங்கள் இஷ்டத்துக்கு அட்லியின் அடுத்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து கதை அளந்து வருவதாக தான் கூறப்பட்டு வருகிறது. 
 
Edited by Siva