1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 14 மார்ச் 2018 (19:04 IST)

சாந்தனு படத்தை இயக்குகிறார் மிஷ்கின்: அதிகாரபூர்வ அறிவிப்பு

இயக்குனர் மிஷ்கின் சாந்தனு பாக்யராஜை ஹிரோவாக வைத்து புதிய படத்தை இயக்குகிறார்.
 
மிஷ்கினின் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான துப்பறிவாளன் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அவர் தனது தம்பி அதித்யா இயக்கத்தில் சவரக்கத்தி படத்தில் வில்லனாக நடித்து பாராட்டு பெற்றார்.
 
இந்நிலையில், அவர் சாந்தனு பாக்யராஜை ஹிரோவாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்குகிறார். அந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.