ஆஸ்கர் நாயகனுடன் இணையும் மிஷ்கின்
இயக்குனர் மிஷ்கின் சாந்தனுவை ஹிரோவாக வைத்து இயக்கவிருக்கும் திரைப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
துப்பறிவாளன்’ படத்தைத் தொடர்ந்து சாந்தனு நடிப்பில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் மிஷ்கின். பி.சி.ஸ்ரீராம் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். ‘நளனும் நந்தினியும்’, ‘சுட்ட கதை’, ‘நட்புனா என்னானு தெரியுமா?’ படங்களைத் தயாரித்த லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். மேலும், இந்த படத்தில் ஹிரோயினாக நடிக்க சாய் பல்லவி மற்றும் நித்யா மேனனிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க போவதாக கூறப்படுகிறது.