ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Jeyakumar
Last Modified: செவ்வாய், 17 அக்டோபர் 2023 (08:16 IST)

பள்ளிக் குழந்தைகளைக் கவர்ந்து இழுக்கும் “ஷாட் பூட் த்ரீ” – இதுதான் கதை!

Shot boot three
"ஷாட் பூட் த்ரீ" திரைப்படம், குழந்தைகள் மத்தியில் ஒரு பெரும் அலையை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் திரைக்கதை, கதாப்பாத்திரங்கள், மையக் கருத்து ஆகியவை, குழந்தைகளை மிகவும் கவர்ந்துள்ளன.


 
வீட்டை விட அலுவலகத்தில் அதிக நேரம் இருக்கும் பெற்றோரின் மகன் கைலாஷ். தனது தனிமையைப் போக்கிக்கொள்ள, தனக்கு ஒரு தம்பி வேண்டும் என்று பெற்றோரைக் கேட்க, கைலாஷின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. இதனால் கைலாஷ் தன் நண்பர்களுடன் சேர்ந்து மேக்ஸ் என்ற செல்லப் பிராணியை வளர்க்கிறான். தன் தம்பி போன்று கைலாஷ் வளர்க்கும் மேக்ஸ், ஒரு நாள் தொலைந்துவிடுகிறது. தனது செல்லப் பிராணியைத் தேடும் நான்கு சிறுவர்கள் கற்றுக்கொள்ளும் பாடம் தான் இந்த “ஷாட் பூட் த்ரீ.” 

திரைப்படத்தின் வெற்றிக்குப் பள்ளிகள், முக்கியக் காரணமாகத் திகழ்கின்றன. பள்ளி நிர்வாகத்தினர், “ஷாட் பூட் த்ரீ”யை ஒரு படமாக இல்லாமல், பாடமாகப் பார்க்கிறார்கள். தங்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு நல்ல அனுபவம் தரக்கூடிய, சமூகச் சிந்தனை ஊட்டக்கூடிய வாய்ப்பாகப் பார்க்கிறார்கள்.

அக்டோபர் 6 அன்று வெளியான "ஷாட் பூட் த்ரீ"  காமெடி கலந்த பொழுதுபோக்கு  அம்சங்களுடன் கூடிய இந்தப் படம், திரையரங்குகளில் ஓடிக் கொண்டுள்ளது. இந்தத் திரைப்படத்தை அருணாச்சலம் வைத்தியநாதன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். ஆனந்த் ராகவ் மற்றும் அருணாச்சலம் வைத்யநாதன் ஆகியோரின் கூட்டு முயற்சியில் திரைக்கதை அமைந்துள்ளது சினேகா, வெங்கட் பிரபு, யோகிபாபு ஆகியோருடன் சிவாங்கி, பூவையார், ப்ரணிதி, கைலாஷ் ஹீட் மற்றும் வேதாந்த் வசந்த் ஆகியோர் நடித்துள்ளார்கள்.