ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Jayakumar
Last Modified: வியாழன், 12 அக்டோபர் 2023 (12:04 IST)

ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா! – சென்னையில் பிரம்மாண்ட ஏற்பாடு!

Jappan
ஜப்பான் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில் இசை வெளியீடு சென்னையில் நடைபெற உள்ளது.


 
இயக்குனர் ராஜூ முருகன் இயக்கம் ஜப்பான் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி, அனு இமானுவேல் நடிக்கின்றனர். இப்படம் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனுடைய ஆடியோ ரிலீஸ் வரும் 28ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுவதாக உள்ளது.  இதில் பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மிகவும் பிரமாண்டமாக நடைபெறுவதாக தகவல்கள் வருகின்றன. பிரபல நகைக்கடை கொள்ளையன் திருவாரூர் முருகனின் கதையை  வைத்து 'ஜப்பான்' படம் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பல கொள்ளை சம்பவங்களில் நடத்திய திருவாரூர் முருகன்,  தொற்று நோயால் பாதிக்கப்பட்டு பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதனை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி கடந்த 2020 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இவரது வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு 'ஜப்பான்' படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதுக்குறித்த தகவல் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.