1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Jayakumar
Last Modified: வியாழன், 12 அக்டோபர் 2023 (10:18 IST)

அந்த இடத்துல இருந்த டாட்டூவை காணோமே! கணவரின் பெயரை நீக்கிய சமந்தா!

Samantha
பிரபல நடிகை சமந்தா தனது முன்னாள் கணவர் நாகசைதான்யாவின் பெயரை டாட்டூவாக குத்தியிருந்த நிலையில் அதை தற்போது நீக்கியுள்ளார்.



தனது உடலில் சில இடங்களில் தனக்கு பிடித்தபடி பச்சை குத்தியுள்ளார். முதுகில் YMC என குறிப்பிட்டு பச்சை ஒன்று குத்தியுள்ளார். அது அவர் கதாநாயகியாக நடித்த முதல் படம் 'Ye Maaya Chesave' குறிப்பிடும் விதமாக குத்தியுள்ளார்.தன்னுடைய விலா எலும்பு பகுதியில் Chay என பச்சை குத்தியுள்ளார். முன்னாள் கணவர் நாகசைதன்யாவின் மீது தான் வைத்திருந்த அதிகமான காதலை வெளிப்படுத்தும் விதமாக பச்சை குத்தி இருந்தார்.

சமந்தா - நாகசைதன்யா இருவரும் காதலித்து 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் அவர்கள் கடந்த 2021ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதன்பின் சில காலம் இதை தனது உடலில் இருந்து நீக்காமல் வைத்திருந்தார் சமந்தா.ஆனால், தற்போது தன்னுடைய விலா எலும்பு பகுதியில் குத்தியிருந்த Chay எனும் டாட்டூவை நீக்கிவிட்டார்.

சமீபத்தில் வெளிவந்த சமந்தாவின் போட்டோஷூட் புகைப்படம் இதை உறுதி செய்துள்ளது.விவாகரத்து ஆன பின்பும் நாகசைதன்யாவின் நினைவாக அவர் அளிக்காமல் வைத்திருந்தார். தற்போது அவர் Chay என்னும் எழுத்தை  நீக்கியுள்ளார் நடிகை சமந்தா.