செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 28 நவம்பர் 2020 (18:24 IST)

பிரபாஸின் பிரமாண்ட படத்தின புதிய ஹீரோயின் இவர்தான்!!

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி1,2 ஆகிய படங்கள் உலகளவில் பெரும் வெற்றி பெற்றன. இப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபாஸின் கிரேஸ் எகிறியது.

இந்நிலையில், அவரது சம்பளமும் சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு இணையாக ரூ.100 கோடி என்று அதிரடியாக அறிவித்தார். அவரது மார்க்கெட்டும் விரிவானது.

இந்நிலையில், தனது அடுத்தடுத்த படங்களில் பெரும் கவனம் செலுத்தி வரும் பிரபாஸ், முன்னணி நடிகைகளையே அதில் நடிக்க வைத்து வருகிறார்.

தற்போது ராதே ஷ்யாம் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

இந்நிலையில் மகாநதி என்ற படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கவுள்ள ஒரு புதிய படத்தில் தீபிகா படுகோன் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், ஓம் ராவத் இயக்கத்தில்   பிரபாஸ், சைப் அலிகான் இணைந்து நடிக்கவுள்ள படம் ஆதிபுருஷ். இப்படத்தில் கிரித்தி சனோன் என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

மேலும் ஆதிபுருஷ் படத்தில் சைப் அலிகான் ராவணனாக நடிக்கவுள்ளார். பிரபாஸுக்கு ஜோடியாக கிரித்தி சனோன் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.