செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 28 நவம்பர் 2020 (16:01 IST)

விஜய்யின் ''மாஸ்டர்'' தியேட்டரிலா…..? ஒடிடியிலா…? இந்திய அளவில் ஹேஸ்டேக் டிரெண்டிங்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி, ஆண்டிரியா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
 

இப்படத்தின் டீசர் இதுவரை 4 கோடி பேர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளதை அடுத்து இப்படத்தின் டிரைலர் மற்றும் வெளியீட்டுக்காக ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தை தியேட்டரில் கோலாகலமாகக் கொண்டாடிப் பார்ப்பதையே பெரும்பாலான ரசிகர்கள் விரும்புகின்றனர்.

இந்நிலையில், விஜய்யின் ரசிகர்கள் பிகில் திரைப்படத்திற்குப் பிறகு, மாஸ்டர் திரைப்படத்தைப் பெரிதும் எதிர்ப்பார்த்துள்ளனர்.

எனவே மாஸ்டர் படம் தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டுமென விஜய்யின் ரசிகர்கள் #MasterOnlyOnTheaters என்ற ஹேஸ்டேக் உருவாக்கி இந்திய அளவில் டிரெண்டிங் செய்து வருகின்றனர். #MasterOnlyOnTheaters #Master