1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 29 ஜூன் 2023 (16:15 IST)

''மாமன்னன்'' படத்திற்கு எதிராக போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு

MAAMANNAN
உதயநிதியின் மாமன்னன் படத்திற்கு எதிராக திண்டுக்கல் பகுதியில்  போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

உதயநிதி நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  மாமன்னன். இப்படத்தில்  வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில்,  மாமன்னன் திரைப்படம் இன்று முதல் உலகம் முழுவதும் ரிலீஸாகி, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு அகில இந்திய பார்வார்ட் பிளாக் கட்சியினர் ‘’மாமன்னன் படத்தை திரையிட்டால் தேனி வெற்றி  தியேட்டர் மீது தாக்குதல் நடத்தப்படும்’என்று திரையரங்க மேலாளரிடம் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில்,  இன்று வெளியாகியுள்ள இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திண்டுக்கல்லில் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.

இதற்கிடையில் தமிழ் தேசிய பார்வார்ட் பிளாக் கட்சியின் மா நில பொதுச்செயலாளர் செல்வம் மாவட்ட சூப்பிரண்ட் அலுவலகத்தில் ஒரு மனு அளித்துள்ளார்.அதில், ‘’மாமன்னன் படத்தை நமமது பகுதிகளில் திரையிட அனுமதிக்க வேண்டாம்’’ என்று கூறப்பட்டுள்ளது.