1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Udayanidhi gifted a luxury car to Mari Selvaraj Do you know what car

மாரி செல்வராஜுக்கு சொகுசு காரை பரிசளித்த உதயநிதி ...என்ன கார் தெரியுமா?

maamannan
உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாமன்னன். இத்திரைப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இப்படம் வெளியாகும் முன்பு பல சர்ச்சைகள் இருந்த நிலையில்,   நேற்று முன் தினம் ரிலீஸ்  ஆன மாமன்னன் படம்  நேர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதனால் படக்குழு மகிழ்ச்சியடைந்து, இன்று இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடினர்.

இப்படத்தைப் பார்த்த பின் ‘’இறுதியில் சமூகநீதியே வெல்லும் என உரத்தும் பேசும் திரைஇலக்கியமே மாமன்னன்’’ என்று  விசிக தலைவர் திருமாவளவன் பாராடியிருந்தார்.

இதற்கு  உதய நிதி தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’#மாமன்னன் திரைப்படத்தை பார்த்துவிட்டு, படத்தில் பேசப்பட்டுள்ள சமூக நீதி அரசியலை மேற்கோள்காட்டி உள்ளன்போடு வாழ்த்திய வி.சி.க தலைவர் அண்ணன்  திருமாவளவன் அவர்களுக்கு நம் படக்குழு சார்பில் என் அன்பும், நன்றியும்.’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இப்படத்தின் வெற்றியை  அடுத்து,  இயக்குனர் மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் காரை உதயதி பரிசளித்துள்ளதாக வலைபேச்சு அந்தனன் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரையில்
பிங்க் காஸ்டியூம் பீலிங்ஸ் ஏத்துது... ஸ்டன்னிங் லுக்கில் நடிகை சினேகா!