திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 19 அக்டோபர் 2018 (17:51 IST)

விஜய்க்கு ஜோடியாகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக மாறிவிட்ட ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஆந்திராவில் அதிர்ஷ்டக்காற்று அடித்துள்ளது .

அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் டோலிவுட்டில் வசூல் நாயகனாக அவதாரம் எடுத்தவர் விஜய் தேவரகொண்டா. 'நோட்டா' திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களிடம் அறிமுகம் ஆனார். 



இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் தேவரகொண்டாவுடன் புதிய படத்தில் நடிக்கவிருப்பதாக டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது இவரது முதல் தெலுங்கு படம் என்பதால், அங்கும் வெற்றியடைய ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இப்படத்தை கிராந்தி மாதவ் இயக்குகிறார்.