’தல’ அஜித் பாராட்டிய ’’பைக் ரைடிங்’’ படம் இதுதான்! படக்குழு மகிழ்ச்சி
அஜித்குமார் நடிப்பில் தற்போது வேகமாக உருவாகிவரும் படம் வலிமை. இப்படத்தை போனி கபூர் தயாரிக்க, ஹெச்.வினோத் இயக்கி வருகிறார்.இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.#RidersStory
அஜித் ரசிகர்களுக்கு விருந்துவைக்குமளவுக்கு இப்படத்தில் அஜித்குமாரின் பைக் ரேஸ் காட்சிகளும், ஆக்சன் காட்சிகளும் உள்ளதாகத் தெரிகிறது.
ஆனால் அஜித் ரசிகர்கள் அப்டேட்டுக்காக தினமும் படக்குழுவினரிடம் கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில்,இதே மா கதா என்ற தெலுங்குப் பட டீசரைப் பார்த்த நடிகர் அஜித்குமார் அவர்களைப் பாராட்டியுள்ளார். இதை அதிகாரப்பூர்வமாக இப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அஜித் கூறியுள்ளதாவது: என் நண்பர் ராம் பிரசாத் இப்படத்தின் டீசரை என்னிம் காட்டினார்.எனக்கு இந்த டீசர் பிடித்திருந்தது. இதில் வரும் பைக் ரைடிங் எனக்குப் பிடிதிருந்ததால் என்னை அதனோடு தொடர்பு படுத்திக்கொண்டேன். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் அஜித்குமார் இப்படத்தைப் பாராட்டிய உற்சாகத்தில் உள்ள இப்படக்குழுவினர்.