புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 29 ஜனவரி 2021 (11:03 IST)

வலிமை ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றம்… நேர்கொண்ட பார்வை செண்டிமெண்ட் வேலை செய்யுமா?

அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் முக்கியமானக் காட்சிகளை வெளிநாடுகளில் சென்று படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளது. அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு ஏப்ரல் 14 அல்லது மே 1 ஆகிய தேதிகளில் படத்தை ரிலீஸ் செய்யலாம் எனப் படக்குழு முடிவு செய்திருந்தது.

ஆனால் வெளிநாட்டுக் காட்சிகளை திட்டமிட்டபடி படமாக்குவதில் இப்போது ஒரு சிக்கல் எழுந்துள்ளதால் படப்பிடிப்பை நடத்தி முடிப்பதற்கே மே மாதம் ஆகிவிடும் என்ற சூழல் நிலவுகிறதாம். அதனால் படத்தின் ரிலீஸை ஆகஸ்ட் 15 ஆம் தேதி என்று தள்ளி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஹெச் வினோத் அஜித் கூட்டணியில் உருவான நேர்கொண்ட பார்வை திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம்தான் ரிலீஸானது என்பது குறிப்பிடத்தக்கது.