திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 27 ஜூன் 2022 (18:15 IST)

சினிமாவை கடவுளாக பார்க்கும் மாநிலம் இது - நடிகர் சுதீப்

vikranth rona
கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்  சுதீப். இவர் இயக்குனரின் ராஜமெளலி இயக்கத்தில் நான் ஈ படத்தின் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.

இந்த நிலையில், கன்னட இயக்குனர் பண்டாரி இயக்கத்தில், சுதீப்   நடிப்பில் உருவாகியுள்ள படம்' விம்ராந்த் ரோணா'. இப்படத்தை ஷாலினி ஆர்ட்ஸ் சார்பில் ஜாக் மஞ்சு நாத் தயாரித்துள்ளார்.

இப்படம் வரும் ஜுலை 28 ஆம் தேதி உலகம் முழுவதும் கன்னடம், தெலுங்கு, மலையாளம், இன்டி என பல மொழிகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் புரமோஷன் நிகழ்ச்சி நடந்தது. அதில், பேசிய  நடிகர் சுதீப், இது ஒரு நல்ல படம். இப்படத்தில் நான் நடித்திருப்பதில் பெருமைப்படுகிறேன்.   கர்நாடகத்தில் சினிமாவைக் கடவுளாகக் கொண்டாடுகிறார்கள். அது, கே.ஜி;எஃப் படம் மூலம் தெரிந்துள்ளது. தமிழ் சினிமாவில் நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.