வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 22 செப்டம்பர் 2022 (22:12 IST)

''நானே வருவேன்'' பட அப்டேட் கொடுத்த யுவன் சங்கர் ராஜா

nane varuven
தனுஷின் நானே வருவேன் படத்தின் அப்டேட்டை  யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.

செல்வராகவன் – தனுஷ் – ஐந்தாவது முறையாகவும், இவர்களுடன் யுவன் கூட்டணியில் 12 ஆண்டுகளுக்குப் பின், கலைப்புலி எஸ்தாணு தயாரிப்பில் உருவாகியுள படம்   நானே வருவேன்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் நானே வருவேன் திரைப்படம் வரும் 29ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  இப்படம் 2 மணி நேரம்  தான் என்பதால், ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக  இருக்கும் எனவும், ரசிகர்கள் சலிக்காமல் உட்கார்ந்து பாம் பார்க்க ஏதுவாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த  நிலையில்,   நானே வருவேன் படத்திற்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதை  நடிகரும் இயக்குனருமான செல்வராகவன் தன் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், நாவே வருவேன் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள யுவன்,  இன்று தன் டுவிட்டர் பக்கத்தில்,   நானே வருவேன் திரைப்படத்திற்கு ஆ.ஆர். எனப்படும் பின்னணி இசைக் கோர்ப்பு பணிகளை முடித்துள்ளதாக தெரிவித்துள்ள்ளார். இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.