இதுவரை நடிக்காத வேடத்தில் நடிக்கும் சூர்யா…இயக்குநர் இவர்தான்

Sinoj| Last Modified செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (19:09 IST)


நடிகர் சூர்யா
ஒரு புதிய படத்தில்
வக்கிலாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.


நடிகர் சூர்யா தயாரித்த நடித்திருந்த சூரரைப் போற்று. இப்படத்தை இறுதிச் சுற்று என்ற படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கினார். சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்தார்.ஜி.வி.பிரகாஸ் இசையமைத்தார்.


இப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அத்துடன் இந்தி, தெலுங்கு, கன்னட,மலையாளப் பட நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் இப்படத்தைப் பாராட்டினர்.


சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் சூரரைப் போற்று திரைப்படம் திரையிடப்பட்டது. இப்படம் ஆஸ்கர் நாமினேசனுக்கும் சென்ற பெருமை பெற்றது.

இந்நிலையில், சூர்யா அடுத்து, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக ஜல்லிக்கட்டு வீரராக நடித்து வருகிறார்.

இப்படத்தை முடித்துவிட்டு, கூட்டத்தில் ஒருவன் என்ற படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இயக்கவுள்ள படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும், இப்படத்தில் சூர்யா வக்கீலாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :