1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 4 ஜனவரி 2019 (16:15 IST)

அடியாத்தி ..! காலேஜ் படிக்கும்போது இப்படியா இருந்தீங்க..! தன் புகைப்படத்தை தானே வெளியிட்ட பிரபல நடிகை..!

இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக தமிழ் மற்றும் இந்தி ரசிகர்களைக் கவர்ந்த ரித்திகா சிங் தான் கல்லூரியில் படிக்கும்போது எடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


 
பஞ்சாபை சேர்ந்த ரித்திகா ஒரு நிஜ குத்துசண்டை வீராங்கனை . இவர்  மிக்சுடு மார்ஷல் அர்ட்ஸ் எனப்படும் குத்து சண்டை போட்டிகளில் கலந்து கொண்டு அதில் வெற்றியை குவித்தவர். 
 
இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா 2013 ஆண்டில் ரித்திகாவை ஒரு விமான பயணத்தில் சந்தித்தார். ரித்திகா குத்துச்சண்டை விளையாட்டின் மீது வைத்திருந்த ஆர்வத்தையும் கட்டான உடல் தோற்றத்தையும் பார்த்து வியந்த சுதா ரித்திகாவுக்கு நடிக்கும் வாய்ப்பை தருவதாக கூறியிருந்தார். அவர் கூறியது போலவே இவரை இறுதி சுற்று படத்தின் மூலம் சினிமா உலகதிற்கு அறிமுகம் செய்தார்.   
 
மார்ஷல் ஆர்ட்ஸ் வீராங்கனை ரித்திகா தனது உடல் குறித்து எப்போதும் முழு கவனம் செலுத்தி வருகிறார். அதே நேரத்தில் ஹீரோக்கள் வைத்திருக்கும்  சிக்ஸ் பேக் போன்றே தனது வயிற்றை தட்டையாக குறைத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.  அந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். 
 
இந்நிலையில் தற்போது கல்லூரி படிக்கும் போது எடுத்துக்கொண்ட ஒரு பாஸ்போர்ட் புகைப்படத்தை ரித்திகா தனது படிக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


 
அந்த புகைப்படத்தை பார்த்தால் ஸ்கூல் படிக்கும் குழந்தை போன்றே  இருக்கிறீர்கள் என சிலர் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.