செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (22:04 IST)

கமல்ஹாசன் பாடல் எழுத... அனிருத், யுவன்சங்கர் ராஜா ,சித் ஸ்ரீராம் பாடிய பாடல் ...

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்  அறிவும் அன்பும் என்ற பாடலை எழுதியுள்ளார்.  கூடிய விரையில் இப்பாடல்  வெளியாகவுள்ளது.

இந்தியாவில் வரும் மே மாதம் 3 ஆம் தேதிவரை ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில்,  அறிவும் அன்பும் என்ற தலைப்பில் நடிகர் கமல்ஹாசன் எழுதியுள்ள இப்பாடலை, இந்தப் பாடலை இசையமைப்பாளர் அனிருத் , யுவன் சங்கர் ராஜா, ஆண்டிரியா, சித்தார்த், லிடியன்,  சித் ஸ்ரீராம் போன்றோர் பாடியுள்ளனர்.

இப்படல் வரும் 23 ஆம் தேதி திங்க் மியூசிக் சேனலில் வெளியாக உள்ளது. மனிதர்களிடன் அன்பும் மனித நேயத்தையும் வலியுறுத்தி இப்பாடல் உருவாகியுள்ளது,. மேலும், இப்பாடலுக்கு யாரும் சம்பளம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.