வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 29 ஏப்ரல் 2020 (13:43 IST)

இவ்வளவு சீக்கிரம் போய்ட்டீங்களே - இர்ஃபான் கான் மறைவிற்கு கமல் ஹாசன் வருத்தம்!

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான்கான் (வயது 53)  புற்றுநோய் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று இவர் சமீபத்தில் அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பினார்.

இதையடுத்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தான் ராஜஸ்தானில் அவரது தாய் காலமானார். ஊரடங்கு உத்தரவு காரணத்தால் தாயின்  இறுதி சடங்கில் கூட பங்கேற்க முடியாத  இர்ஃபான் கான்  வீடியோ மூலம் தனது தாயின் இறுதிச்சடங்கை கண்ணீருடன் பார்த்த வீடியோ வெளிவந்து அனைவரையும் அதிருப்திக்குள்ளாக்கியது.

இந்நிலையில் இன்று  இர்ஃபான் கான் மறைவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இவரது இறப்பு செய்தியை ஏற்றுகொள்ளமுடியாமல் ரசிகர்கள் மனவேதனை தெரிவித்து வருகின்றனர். இவரது இறப்பிற்கு தொடர்ந்து திரைப்பிரபலங்கள் , ரசிகர்கள் , அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் " மிக விரைவில் சென்றுவிட்டீர் இர்ஃபான்  ஜி, உங்கள் பணி எப்போதும் என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது. எனக்குத் தெரிந்த மிகச் சிறந்த நடிகர்களில் நீங்களும் ஒருவர், நீங்கள் நீண்ட காலம் வாழ விரும்புகிறேன். அதிக காலம் வாழ நீங்கள் தகுதியானவர். இந்த நேரத்தில் உங்கள் குடும்பத்திற்கு அதிக பலமும், சக்தியும் இருக்கட்டும். என கூறி வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.