இது விஜய் சேதுபதிக்கு அவமானமே அன்றி பெருமை அல்ல... கொந்தளிக்கும் மக்கள்

VM| Last Updated: வியாழன், 14 பிப்ரவரி 2019 (18:04 IST)
சென்னை அண்ணா சாலை முழுக்க இன்று  ஒட்டப்பட்டுள்ள ஒரு திரைப்படத்தின் போஸ்டர், பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. 


 
கடலை போட ஒரு பொண்ணு வேணும் என்ற பெயரில் புதிய படம் தயாராகி வருகிறது.  இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது.இந்த படத்தின் போஸ்டரில்...... போட ஒரு பொண்ணு வேணும் என்ற பெயரில் விளம்பர செய்யப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், இவ்வளவு தரங்கெட்ட தனமான விளம்பரத்தை போட்டு படம் எடுப்பது மிக தவறு என கொந்தளிக்கின்றனர்.  இது தொடர்பாக லாவண்யா என்பவர் கூறுகையில்,
 
பெண் என்றால் போகப்பொருளாக தான் இந்த சமூகம் பார்க்கும், பார்க்கணும் என்ற எண்ணத்தில் சென்னை முழுதும் இப்படி ஒரு போஸ்டர். உங்க ப்ரோமோஷன்க்கு பெண்களை இழிவு படுத்தனும். ரொம்ப தெளிவா கோடு போட்டு, அதுல உன் கற்பனை ஏத்த மாதிரி என்ன வேணுவோ அந்த வார்த்தையை சேர்த்து படிக்கலாம் என்று கொந்தளித்துள்ளார்.
 
டுவிட்டர் லிங்க்
 
இதேபோல் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிந்தன் , விஜய் சேதுபதிக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்து பதிவிட்டுள்ளார். அதில், 


 
இது போல ஒரு தரம் கெட்ட விளம்பரத்தோடு வரும் திரைப்படத்தின் first look-கினை , நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டால், அது அவருக்கு அவமானமே அன்றி பெருமை அல்ல என்று கூறியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :