விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணையும் சமந்தா

Last Modified திங்கள், 11 பிப்ரவரி 2019 (08:00 IST)
விஜய்சேதுபதி, சமந்தா முதல்முறையாக இணைந்து நடித்த 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படம் வரும் மார்ச் அல்லது ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் சேதுபதியும் சமந்தாவும் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளனர். இயக்குனர்
டில்லி பிரசாத் இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்திற்கு துக்ளக் என்ற டைட்டில் வைக்கப்பட்டதாகவும் சமீபத்தில் செய்தி வெளியானது. தற்போது இந்த படத்தின் டைட்டில் 'துக்ளக் தர்பார்' என்று மாற்றப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி விஜய்சேதுபதிக்கு ஜோடியாக இந்த படத்தில் சமந்தா நடிக்கவுள்ளதாகவும் தகல்வகள் வந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.


விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' படத்தை தமிழகம் முழுவதும் விநியோகம் செய்து மிகப்பெரிய லாபம் பெற்ற நிறுவனமான '7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ' நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றது. இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :