புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By VM
Last Updated : செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (10:42 IST)

என் மக்களின் நம்பிக்கையை குலைக்குமாறு நடந்து கொள்ளவே மாட்டேன்: விஜய் சேதுபதி உருக்கம்.

நடிகர் விஜய் சேதுபதி இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையைக் கொச்சைப்படுத்தி பேசியதாகக் கூறி ஒரு புகைப்படம் வைரலானது. இதற்கு விஜய் சேதுபதி திட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.



 
விஜய் சேதுபதி கடந்த பிப்ரவரி 6-ம் தேதி செல்போன் திருட்டைக் கண்டுபிடிக்கத் தமிழக காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட, 'டிஜிகாப்' என்ற மொபைல் செயலி குறித்து பேசினார்.
 
அவருடைய பேச்சு பிரபல செய்தி ஊடகத்தின் டிஜிட்டல் கார்டில் வெளியாகி இருந்தது. அதில் `காவல்துறைக்கும், பொதுமக்களுக்குமான இடைவெளி, இந்த `டிஜிகாப்' செயலி மூலம் குறையும்" என்று இருந்தது. இதனை சில சமூக விரோதிகள் போட்டோஷாப் செய்து மாற்றி,   பகவத் கீதையை விஜய் சேதுபதி  அவதூறு கூறுவதுபோல் இருக்கும் வாசகத்தை  வைத்துள்ளனர் . இந்த புகைப்படத்தை போட்டு இந்துக்களின் எதிரி விஜய் சேதுபதி என சிலர் சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டனர். இது குறித்து அறிந்த விஜய் சேதுபதி தனது பேஸ்புக் பக்கத்தில் உண்மை இதுதான் என  விளக்கம் அளித்துள்ளார். 
 
அதில், செய்தி நிறுவனத்தின் உண்மைச் செய்தியையும், விஷமிகள் பரப்பிவிட்டு போட்டோ ஷாப் கருத்தையும் பதிவிட்டுள்ளார். அத்துடுன் அவர் , ``‪என் அன்பிற்குரிய மக்களுக்கு‬ ‪பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலைப் பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாகப் பேசியதும் இல்லை‬ பேசவும் மாட்டேன்‬. ‪சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது‬. ‪எந்தச் சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்துகொள்ளவே மாட்டேன்‬." எனப் பதிவிட்டிருந்தார். இப்பதிவுடன் தான் பேசிய  வீடியோ லிங்கையும் பதிவு செய்தார்.