திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 1 மார்ச் 2019 (09:53 IST)

பஞ்சாபில் பாகிஸ்தான் உளவாளி கைது! திடுக் தகவல் வெளியாகுமா?

புல்வாலா தாக்குதலுக்கு பின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதட்டமான சூழல் இருந்து வரும் நிலையில் இந்திய ராணுவ வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி கொண்டார். நல்லெண்ண அடிப்படையில் இன்று அவர் விடுதலை செய்யப்படுவார் என பாகிஸ்தான் பிரதமர் நேற்று அறிவித்துள்ளார். மேலும் இந்தியாவுடன் சமாதானப்பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அவர் கூறியிருப்பினும் எல்லையில் இன்னும் பாகிஸ்தான் ராணுவமும்,தீவிர்வாதிகளும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் பெஃரோஸ்பூர் என்ற பகுதியில் பாகிஸ்தான் உளவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கைது செய்யப்பட்ட உளவாளியிடம் இருந்து பாகிஸ்தான் செல்போன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அந்த செல்போனில் திடுக்கிடும் தகவல் ஏதேனும் இருக்குமா? என்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
 
இந்திய வீர்ர் அபிநந்தன் இன்று பாகிஸ்தானில் இருந்து விடுதலை செய்யப்படவுள்ள நிலையில் பாகிஸ்தான் உளவாளி ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது