திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (11:39 IST)

காஜலுக்குத் திருப்புமுனையைக் கொடுக்கிற படம்: ரமேஷ் அரவிந்த்

பிரபல பாலிவுட் படமான குயின் படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் ஆகிறது. பாரிஸ் பாரிஸ் என்ற பெயரில் தயாராகும் அந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால் நடித்துள்ளார்.

படம் எப்படி தயாராகிறது என்ற கேள்விக்கு இயக்குனர் ரமேஷ் அரவிந்த் பதில் அளித்து  பேசியதாவது : 'இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால் தெலுங்கில் தமன்னா, மலையாளத்தில் மஞ்சிமா மோகன், கன்னடத்தில் பாருல் யாதவ். இப்படி மொழிக்கு ஒவ்வொரு ஹீரோயின்கள். இவங்களைத் தவிர முக்கியமான கேரக்டரில் எமி ஜாக்ச‌ன் நடிக்கிறார்.

மலையாளத்துல நீலகண்டனும், தெலுங்கில் பிரசாத்தும் டைரக்‌‌ஷன் பண்றாங்க. என்னைப் பொறுத்தவரை, இந்தப் படம் காஜலுக்குத் திருப்புமுனையைக் கொடுக்கிற படமா இருக்கும்.

‘பரமேஸ்வரி’ங்கிற கேரக்டர்ல அழகாக நடிச்சிருக்காங்க. எமி ஜாக்ச‌ன் தமிழ் வசனங்களை மனப்பாடம் பண்ணி அவ்வளவு அழகா பேசுறாங்க. அவங்க பேசுறதைப் பார்த்துட்டு, நானே ஆச்சர்யம் அடைந்தேன்' என்றார்.