திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: சனி, 22 செப்டம்பர் 2018 (16:24 IST)

அட்லீயின் அடுத்த படம் இவருடனா! முக்கிய தகவல்

அட்லீ விஜய்யின் 63 வது படத்தை இயக்க போவது நம்ம எல்லாருக்குமே தெரியும்.

தெறி, மெர்சல் படத்துக்கு பிறகு மூன்றாவது முறையாக விஜய் அட்லீ கூட்டணி இணைகிறார்கள். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் ஷூட்டிங் தொடங்கும் என்று தெரிகிறது. இப்ப முக்கியமான அப்டேட் என்னவென்றால் , அட்லீ- விஜய் படத்துக்கு அப்புறம தெலுங்கு படத்தை இயக்கப் போவதாக தகவல் வந்திருக்கு.

ஜூனியர் என்டிஆர் இந்த படத்துல ஹீரோவாக நடிக்கப் போவதாகவும் சொல்றாங்க. இந்த படத்தோட ஷூட்டிங் 2019 வருஷத்துக்கு அப்புறம் இருக்கும்னு தகவல் வந்திருக்கு. ஏற்கனவே விஜய் படத்தை இயக்கிவிட்டு முருகதாஸ் தெலுங்கு படத்தை இயக்கி இருக்காரு. இப்ப  அந்த வரிசையில் அட்லீயும் இணைந்து இருக்காரு.