செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 24 செப்டம்பர் 2018 (18:10 IST)

இரும்புதிரை இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆர்.டி.ராஜா தயாரிப்பில்  சிவகார்த்திகேயன், சமந்தா நடித்த 'சீமராஜா' திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 
இதையடுத்து சிவகார்த்திகேயன்,  'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்திலும், ராஜேஸ் இயக்கத்திலும் நடித்து வருகிறார்.  இதையடுத்து 'இரும்புத்திரை' பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்தில் சிவகார்திகேயன்  நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. 
 
இந்நிலையில்   24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் நிறுவனர் ஆர்.டி.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளார். அதில்... "நல்ல பொழுதுபோக்கான படங்களை கொடுத்துவரும் இந்த அழகான பயணத்தில், இன்று உங்கள் அனைவரின் ஆசிர்வாதத்தோடும், ஆதரவோடும் புரொடக்‌ஷன்ஸ் எண் 7வது படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பி.எஸ்.மித்ரனுடன் இணைவதில் மகிழ்ச்சி. மற்ற தகவல்கள் அணைத்தும் விரைவில் வெளியாகும்" என்று பதிவிட்டுள்ளார்.  
 
இதே தகவலை இயக்குனர் பி.எஸ்.மித்ரனும் தன் ட்விட்டர் பக்கத்தில் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.