சனி, 23 செப்டம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 1 ஜூன் 2023 (18:08 IST)

பிரபல சீரியலில் நடிகராக களமிறங்கும் திருச்செல்வம்

Ethir neechal
நடிகரும் இயக்குனருமான திருச்செல்வம் மெட்டி ஒலி சீரியலில் ஞானராஜ் வேடத்தில் நடித்துப் பின்னர், கோலங்கள் சீரியலை இயக்கினார். இந்த நிலையில், திருச்செல்வம் இப்போது எதிர் நீச்சல் நடிகர்களுடன் இணைந்துள்ளார்.

சீரியலில் தொடர்புடைய ஒருவர் ஆங்கில மீடியாவில் கூறும்போது, ''சீரியலில் ஜீவானந்தம் என்ற கதாப்பாத்திரத்தில் திருச்செல்வம் நடிக்கவுள்ளார். அவரது வருகை பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யம் ஏற்படுத்தும்'' என்று  கூறினார்.

எதிர்நீச்சல் சீரியலில் இணைவது பற்றி நடிகரும் இயக்குனருமான திருச்செல்வம் கூறியதாவது:  ''எதிர் நீச்சல் என்ற சூப்பர் ஹிட் நிகழ்ச்சியில் இணைவதில் ஆர்வமுடன் இருக்கிறேன்.   நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்குத் திரும்பியுள்ளேன்.

ஜி.மாரிமுத்து, கனிகா, பிரியதர்ஷினி, நீலகண்டன் ஆகியோருடன்  இணைந்து பணியாற்றுவதில் மகிழ்சியடைகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

எதிர் நீச்சல் நிகழ்ச்சி கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.