செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வியாழன், 1 ஜூன் 2023 (18:06 IST)

சாக்லெட் பாய் டு ஹேண்ட்ஸம் ஹீரோ - மாதவனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் அலைபாயுதே படத்தில் அறிமுகம் ஆனவர் மாதவன். அதன்பின், பல முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் பல  ஹிட் படங்களைக் கொடுத்து, பாலிவுட்டிலும் கால்பதித்து சாதித்தார்.
 
தமிழில் கௌதம் மேனன் இயக்கிய மின்னலே என்ற திரைப்படத்திலும் மற்றும் டும் டும் டும் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து கன்னத்தில் முத்தமிட்டால் ,  ரன்,  அன்பே சிவம், ஆய்த எழுத்து , இறுதிச்சுற்று , விக்ரம் வேதா போன்ற பல தமிழ் திரைப்படங்களிலும் ரங் தெ பசந்தி, குரு, 3 இடியட்ஸ்  போன்ற இந்தித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் .
 
இந்நிலையில் 2000 காலகட்டத்தில் இருந்தே முன்னணி நடிகையாக இருந்து வரும் மாதவன் ஒரு படத்துக்கு ரூ. 6 முதல் ரூ. 8 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இது தவிர விளம்பரங்கள் மூலமாகவே ரூ. 1 கோடி வரை வருவாய் பெறுகிறாராம். மும்பையில் ஆடம்பர பங்களா, சென்னையில் ரூ. 18 கோடி மதிப்பில் ஒரு வீடு இருக்கிறது. ஆக மொத்தம் மாதவனின் முழு சொத்து மதிப்பு ரூ. 105 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.