மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று யோசித்து கொண்டிருந்தால் நாம் வாழ முடியாது: நயன்தாரா பேச்சு

Last Updated: திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (11:30 IST)
நயன்தாரா நிகழ்ச்சியொன்றில் பேசுகையில், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சிந்தித்துக்கொண்டு இருந்தால் நாம் வாழ்க்கையை வாழ முடியாது என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.  அதற்கேற்றாற்போல், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி அதனை உறுதிப்படுத்தும்படியாகவும் உள்ளது. 
 
நயன்தாரா நடிப்பில் கோலமாவு கோகிலா வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இமைக்கா நொடிகள் படமும் விரைவில்  ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில், கோலமாவு கோகிலா படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் நயன்தாரா ஈடுபட்டு வருகிறார். படத்தில் இடம்பெற்ற பாடலொன்றை விக்னேஷ் சிவனை வைத்து வெளியிட்டுள்ளனர். 
 
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நயன்தாரா பங்கேற்றபோது, காதல் பற்றிய பேச்சுக்களுக்கு விளக்கம் அளித்தார். அவர் கூறும்போது, “இந்த உலகம் உங்களை  பார்க்கிற விதம் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும். சிலருக்கு இன்று உங்களை பிடிக்கும். நாளையே அவர்களுக்கு பிடிக்காமலும் போகலாம்.  மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று யோசித்து கொண்டிருந்தால் நாம் ஒரு வாழ்க்கையை வாழ முடியாது” என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :