வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 20 செப்டம்பர் 2023 (20:47 IST)

''கலைஞர் வசனம் சொல்லு பார்ப்போம்'' என கேட்பார்கள்.- கமல்ஹாசன்

kamal- mk stalin
69 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் எழுதிய வசனம் இன்னும் என்  நினைவில் உள்ளது என்று 'கலைஞர் 1000 விகடனும் கலைஞரும்' என்ற நூல் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவர், இந்தியன்2, கமல்233 ஆகிய படங்களில்  நடித்து வருவதுடன், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் படங்கள் தயாரிப்பதும், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்தும் வழங்கி வருகிறார்.

இந்த நிலையில்,  சென்னை, கலைவாணர் அரங்கில் ‘கலைஞர் 100 விகடனும், கலைஞரும்’  நூல் வெளியீட்டு விழா இன்று நடந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன்  நான் எழுதியது மறக்கக் கூடாது என பேப்பரில் எழுதிவைத்துள்ளேன். ஆனால், 69 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் எழுதிய வசனம் இன்னும் என்  நினைவில் உள்ளது. சினிமாவில் நடிக்க வருமா, கலைஞர் வசனம் சொல்லு பார்போம் என கேட்பார்கள். அப்படி நடிக்க வந்தவர்கள் நாங்கள்;; அவர் எங்கள் ஆசான் என்று  நெழ்ச்சியுடன் கூறினார்.

இந்த நூலின் முதல் பிரதியை முதல்வர் வெளியிட கமல்ஹாசன் பெற்றுக் கொண்ட்டார்.