ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வரும்…பட வாய்ப்புகளை கெடுக்கிறார்கள் –ஏ.ஆர். ரஹ்மான் சகோதரி
இரு ஆஸ்கார் விருதுகளை வென்ற ஏ.ஆர் ரஹ்மானுடன் பணியாற்ற ஹாலிவுட் இயக்குநர்களே காத்திருக்கின்றனர். ஆனால், அவரது ஹிந்தி பட வாய்ப்புகளைப் பறிக்க ஒரு கும்பல் இருப்பதாக ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர்.ரெஹானா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பாலிவுட் நடிகர் சுஹாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு வாரிசு நடிகர்களும் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களும் அவருக்கான படவாய்ப்புகளைப் பறித்ததே காரணம் எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில், சுஷாந்த்தின் கடைசிப் படமான தில் பேச்சாரோ படத்தில் இசையமைக்க அப்படத்தின் இயக்குநரை ரஹ்மானிடன் செல்ல வேண்டாமெனப் பலரும் தடுத்ததாகவும் இதேபோல் தனக்கான வாய்ப்புகளை சில தடுத்து வருவதாகவும் ரஹ்மான் கூறியிருந்தார்.
குறிப்பாக தமிழர் ஒருவர் ஹிந்தி பட உலகில் ஆளுமை செலுத்த விரும்பாதவர்களால் ரஹ்மானின் வாய்ப்புகள் பறிக்கப்பட்டு வருவதாக ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதர் ஏ.ஆர்.ரெஹானா தெரிவித்துள்ளார்.