திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 22 ஜூலை 2020 (11:02 IST)

என்னது சுஷாந்த் மீது மீடுவா? கடைசிப் பட நடிகை சொன்ன பதில்!

சுஷாந்துடன் தில் பச்சேரா படத்தில் நடித்துள்ள சஞ்சனா சிங்கி என்ற நடிகை மீ டு குற்றச்சாட்டுகள் பற்றி பதிலளித்துள்ளார்.

பாலிவுட்டின் பிரபல இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்(34) கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி  அ மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டது இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலிஸார் விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவர் 6 மாதங்களுக்கு மேலாக மன அழுத்தத்தில் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலிவுட்டில் நிலவும் வாரிசுகளின் ஆதிக்கமே சுஷாந்தின் தற்கொலைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

அவரது மரணம் பற்றி இன்றளவும் விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் எழுந்த மீ டு சர்ச்சைகளில் சுஷாந்த் பெயரும் இருந்ததாக தகவல்கள் பரவின. அவரது கடைசிப் படமான தில் பச்சேரா படத்தின் நாயகி சஞ்சனா சிங்கியின் பெயரும் இதில் இணைத்துப் பேசப்பட்டது.

இன்னும் சில தினங்களில் அந்த படம் ஓடிடி பிளாட்பார்ம்களில் வெளியாக உள்ள நிலையில் சஞ்சனா சிங்கி அதுபற்றி இப்போது பேசியுள்ளார். அதில் ‘சுஷாந்த் ஒரு நல்ல சக நடிகர். அவர் ஏதாவது தவறாக நடந்திருந்தால் நான் அந்த படத்தில் நடித்து முடித்திருக்கவே மாட்டேன். ஆனால் நாங்கள் இருவரும் நடித்து டப்பிங்கும் பேசி முடித்தோம். அதனால் உண்மையில்லாத ஒரு விஷயத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் பேச தேவையில்லை’ எனக் கூறியுள்ளார்.