திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 10 மார்ச் 2021 (21:37 IST)

ஹீரோக்கள் செய்ய மறுக்கும் கதாபாத்திரங்கள் இது..சமுத்திரகனியை பாராட்டிய சேரன்.

நடிகர் சமுத்திரகனி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ஏலே. இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படம் குறித்து இயக்குநரும் நடிகருமான சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

அவர் பதிவிட்டுள்ளதாவது:

ஏலே.... எத்தனை பேர் பார்த்தீங்க நெட்பிலிக்ஸ்ல.. ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்கள்.. மிகப்பிரமாதமாக அதேசமயம் உண்மையாக வடிவமைக்கப்பட்ட புதிய கதாபாத்திரம் தம்பி @thondankani க்கு. அந்த கதாபாத்திரத்தை வைத்துக்கொண்டு அப்பா மகனுக்கான உணர்வுகளை பார்வையாளனுக்கு கடத்துவது கிரேட்.

தவமாய் தவமிருந்து போன்ற அப்பாக்களின் மனதை அளந்துவிடலாம்.. இதுபோன்ற அப்பாக்களின் மனதில் கிடக்கும் அவலங்களை அலசுவதும் அவருக்காக கண்ணீர்விட வைப்பதும் சாத்தியம் குறைவான விசயம்.. அதில் வென்றிருக்கிறார்@halithashameem
. திரையில் யூகிக்க முடியாத கதாபாத்திரங்களை கையாளுவதன்மூலம்தான்

புதிய சினிமாக்கள் உருவாகும்.. அப்படிப்பட்ட ஒரு சினிமாதன் ஏலே.. சில்லுக்கருப்பட்டி போலவே இது ஒரு அச்சுவெல்லம்..@thondankani மூன்று மாதிரியான கதாபாத்திரங்களை வெளுத்து வாங்கியிருக்கிறான்.. இதெல்லாம் ஹீரோக்கள் செய்ய மறுக்கும் கதாபாத்திரங்கள்.. செய்து காட்டியிருக்கிறான் தம்பி என சமுத்திரகனியைப் பாராடியுள்ளார்.