திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 12 மே 2023 (14:46 IST)

"அவன் இவன்" படத்தில் முதலில் நடிக்க இருந்த அண்ணன் - தம்பி நடிகர்கள் இவங்க தான்!

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர் பாலா இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம் அவன் இவன். இத்திரைப்படத்தின் கதை ஒரு தகப்பன், வெவ்வேறு தாய்கள் என்று எதிரும் புதிருமாய் இருக்கும் சகோதரர்களான வால்ட்டர் வணங்காமுடி விஷால்,  கும்புடுறேன்சாமி ஆர்யா. ஜமீன் தீர்த்தபதியாக வரும் ஹைனெஸ் ஜி.எம்.குமார். இவர்களுக்குள் நடக்கும் குசும்புத்தனம் தான் படம். 
 
இப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதில் ஹீரோயினாக ஜனனி ஐயர் மற்றும் மது ஷாலினி ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்நிலையில் இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது. ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா ஆகியோர் அண்ணன் தம்பிகளாக முதலில் கமிட் செய்யப்பட்டார்களாம். பின்னர் தயாரிப்பு நிறுவனம் அவர்கள் வேண்டாம் என விஷாலையும் ஆர்யாவையும் ஒப்பந்தம் செய்தனர்களாம்