செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : சனி, 26 அக்டோபர் 2019 (14:55 IST)

இயக்குனர் பாரதி ராஜா வீட்டில் திருட்டு - விலை உயர்ந்த பொருட்கள் அபேஸ் !

“இயக்குனர் இமயம்” எனப் புகழப்படும் பாரதிராஜா தமிழ் சினிமாவின் பல அற்புத படைப்புகளை கொடுத்து உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளைத் திரையில் கண்முன் காட்டியுள்ளார். தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக கருதப்படும் அவரது இயக்கத்தில் பதினாறு வயதினிலே’, ‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண் வாசனை’, ‘முதல் மரியாதை’, ‘கடலோர கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘கருத்தம்மா’ இப்படி பல்வேறு சிறப்பு படங்களை இயக்கியுள்ளார். 

 
மேலும் பல படங்களில் சிறப்பு தோற்றங்களிலும் நடித்து புகழ்பெற்றுள்ளார். இந்நிலையில் சென்னை மாம்பலத்தில்  உள்ள பாரதிராஜாவின் வீட்டில் விலையுயர்ந்த பொருட்களான ஐபோன், வெள்ளிப் பொருட்கள் ஆகியவை திருடு போயிருப்பதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து இந்த புகாரின் பேரில்  போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் , இதற்கு முன்னர் நடிகர் பார்த்திபன் மாறும் இமான் அண்ணாச்சி ஆகியோர் வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.