காஞ்சி சங்கராச்சாரியார் மறைவு; காஞ்சி காமாட்சியம்மன் கோவில் நடை மூடல்

kanchi
Last Modified புதன், 28 பிப்ரவரி 2018 (10:18 IST)
உடல் நலக் குறைவால் காலமான் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர்  மறைவையொட்டி காமாட்சியம்மன் நடை சாத்தப்படுகிறது
மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயேந்திரர்(82) கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து சங்கரமடம் திரும்பிய அவர் ஓய்வு எடுத்து வந்தார்.
 
இந்நிலையில் இன்று காலை சங்கராச்சாரியார் ஜெயேந்திரருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.
 
இதனையடுத்து காஞ்சி காமாட்சியம்மன் கோவில் நடை இன்று சாத்தப்படும் என அக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :