மாஸ்டருக்காக தியேட்டரை திறந்த மலையாள தேசம்??

Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 12 ஜனவரி 2021 (17:05 IST)
கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின்னர் வெளியாகும் முதல் படமாக நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் அமைந்திருக்கிறது. 

 
கேரளாவில் உள்ள திரையரங்குகள் கடந்த மார்ச் மாதம் முதல் 10 மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது திரையரங்குகளில் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு வருகின்றன என்பதும், நாளை முதல் திரையரங்குகள் அங்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின்னர் வெளியாகும் முதல் படமாக நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் அமைந்திருக்கிறது. நாளை சுமார் 350 தியேட்டர்களில் ‘மாஸ்டர்’ ரிலீசாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
மாஸ்டர் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பு, ரசிகர்கள் தியேட்டருக்கு வருகிறார்களா என்பதைப் பார்த்து அதன் பின்னரே மலையாள படங்களை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது 80 மலையாளப் படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் இருப்பதாக தெரிகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :