பொங்கல் ரேஸில் இணைந்த பிரபுதேவா படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
பிரபுதேவா நடிப்பில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள தேள் திரைப்படம் டிசம்பர் மாதமே ரிலீஸாக இருந்தது.
பிரபுதேவா நடித்த தேள் என்ற திரைப்படம் டிசம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் பொங்கலுக்கு ரிலீஸாக் இருந்த வலிமை, ஆர் ஆர் ஆர் மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய மிகப்பெரிய படங்கள் கொரோனா கட்டுபாடுகள் காரணமாக பின் வாங்கின.
இதனால் இப்போது பல சிறிய படங்கள் தங்கள் ரிலீஸை பொங்கலுக்கு கொண்டு வருகின்றன. ஏற்கனவே விஷாலின் வீரமே வாகை சூடும் படம் உள்ளிட்ட சில படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இப்போது தேள் திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது