செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 8 டிசம்பர் 2018 (16:18 IST)

கோரிக்கையை நிராகரித்த பேட்ட படக்குழு! ரஜினி -அஜித் நேரடி மோதல் கன்ஃபார்ம்!

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினி , சிம்ரன், விஜய் சேதுபதி நடித்துள்ள படம்  ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பொங்கலுக்கு வெளியீட உள்ளதாக  அறிவித்ததால் ‘விஸ்வாசம்’ படக்குழு அதிர்ச்சி அடைந்தது.
 


பொங்கலுக்கு விஸ்வாசம் படம் மட்டுமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  ‘பேட்ட’ படமும் வெளியாகும் என்ற அறிவிப்பால், விநியோகஸ்தர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் பலரும் முறையிடத் தொடங்கினார்கள்.
 
இதைத் தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பொங்கல் வெளியீட்டிலிருந்து பின்வாங்க இயலுமா என்பது குறித்து அணுகினார்கள். ஆனால், பேட்ட படம் பொங்கல் அன்று வெளியிடுவது உறுதி, அதில் பின்வாங்கப் போவதில்லை என்று தெரிவித்துவிட்டது. இதனால் பொங்கல் வெளியீட்டு படங்களை தீர்மானிப்பதிலிருந்து விலகிக் கொண்டது தயாரிப்பாளர் சங்கம். இதனால் விஸ்வாசம் மற்றும் பேட்ட ஆகிய இரு படங்களும் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது . ரஜினி -அஜித் நேரடியாக மோதுவது கன்ஃபார்ம்.