1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (21:33 IST)

ரெஸ்டாரண்ட் ஆரம்பித்த அனிருத்

இசையமைப்பாளரான அனிருத், சென்னையில் ரெஸ்டாரண்ட் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதன்பிறகு பல படங்களுக்கு இசையமைத்த அனிருத், இன்று முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார்.
 
அனிருத், தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து தேனாம்பேட்டையில் ரெஸ்டாரண்ட் ஒன்றைத் தொடங்கியுள்ளார். ‘த சம்மர் ஹவுஸ் ஈட்டரி’ என அந்த ரெஸ்டாரண்டுக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தினமும் மதியம் 12 மணி முதல் இந்த ரெஸ்டாரண்ட் திறந்திருக்கும்.